Home » தினமலரை தீயிட்டு எரித்த அதிரை திமுக நிர்வாகிகள்!

தினமலரை தீயிட்டு எரித்த அதிரை திமுக நிர்வாகிகள்!

0 comment



காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் அவசரத்திலும், குடும்ப சூழ்நிலை என பலவித காரணங்களுக்காக காலை உணவை சரிவர சாப்பிடுவதில்லை என அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இச்செய்தியை மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளின் காலை உணவு திட்டத்தை கொட்சைபடுத்திய தினமலர் நாளிதழிலை அதிராம்பட்டினம் திமுக கழக நிர்வாகிகள் தீயிட்டு எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அதிரை நகர திமுக செயலாளர் இராம.குணசேகரன், நகர மன்ற தலைவர் MMS தாகிரா அம்மாள் அப்துல் கரீம், நகர இளைஞர் அணி அமைப்பாளர்கள் முகைதீன் பிச்சை, குணா.கதிரவன் , நகரமன்ற உறுப்பினர்கள் SSMG பாசூல் கான், ஹலீம் , அபுதாகீர் , பகுருதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter