முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுகவின் பல்வேறு அணியினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக பல்வேறு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இத்தொடரில் பல்வேறு ஊர்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இவ்விழாவில் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர திமுக செயலாளர் மதிவாணன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர்கள் சுரேஷ், மனோகரன், கோபால் ராம், நிவேதா ஜெசிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








