மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புக்காக கடந்த 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.
மாதாந்திர பராமரிப்புக்காக சொன்ன நேரத்தில் சரியாக காலை 9 மணிக்கெல்லாம் மின்தடை செய்யப்பட்டுவிடும். ஆனால் மின் விநியோகம் கிடைப்பது என்பது மாலை 5 மணிக்கு அல்லாமல் தாமதமாக ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்துத்தான் செய்யப்படும். அவ்வாறு மின் விநயோகம் கிடைத்தாலும்கூட அன்றைய தினம் முழுவதும் அவ்வப்போது மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரத்துறை பராமரிப்பிற்காக 8 மணி நேரங்களில் என்னதான் செய்கிறார்கள் ?என்ன பராமரிப்பு செய்கிறார்கள் ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இப்போதெல்லாம் மின்தடை ஏற்படும் என்று அறிவிப்புக்கு ஒரு நாள் முன்பே மின்தடை செய்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இந்த பிரச்சனை வாடிக்கையாகிவிட்டது. இதற்கு என்ன காரணம் ? மின்சாரக் கம்பிகள் சரியில்லையா அல்லது மின்சார சாதனங்கள் சரியில்லையா ? என பல கோணத்தில் கேள்வி எழுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பயனளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை குவிக்கின்றனர் அதிரையர்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் கூட மின்தடை பிரச்சினை பெரிதாக இல்லை என்றும் திமுக ஆட்சி வந்தது முதல் தொடர்ச்சியாக மின்தடை பிரச்சனைககளை சந்தித்து வருகிறோம் என்றும் பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.
அதிராம்பட்டினம் வளர்ச்சி அடைந்தவிட்டதாக பலதரப்பில் பேசப்பட்டு வந்தாலும், அடிப்படை தேவையான தடையில்லா மின்சாரம் பெறுவதில் கூட அதிரை இன்னும் நிறைவு பெறவில்லை என்பதே நிதர்சனம். விரைவில் திறக்கப்பட இருக்கும் புதிய 110kv துணை மின்நிலையம் அதிரைக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்…
கட்.. கட்.. பவர் கட்… அதிரையும் தொடர் மின்தடையும்!
284