Sunday, February 1, 2026

அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் உரிமைகள் பறிபோகும் என்றும், 100நாள் வேலை திட்டம்,இலவச மின்சாரம்,வீட்டு வரி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகள் ஆடு மாடு கோழி வளர்ப்பது படிப்படியாக தடைப்படும் எனவும் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் அந்த சலுகைகள் இனி கிடைக்காது எனவும் அந்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழவேனிற்காடு கிராமத்தை இணைக்க முன்னதாக அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 4 கிராமங்களும் இணைதிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img