360
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த அக்டோபர் 5 ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது ஆஸ்திரேலியா.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவித்தது.
241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பொறுப்புடன் விளையாடி உலகக்கோப்பையை 6 வது முறையே கைப்பற்றியுள்ளது.