Sunday, April 28, 2024

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா..??

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர் சாலை விபத்துகள் ஏற்படுவதும் இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும் பொதுமக்கள் பலரும் அறிந்ததே.

இதில் குறிப்பாக சமீபத்தில் அதிராம்பட்டினம் ECR சாலைகளில் ஏற்பட்ட  சாலை விபத்துகளும் அதனால் ஏற்பட்ட மரணங்களும்  மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இதனை கருத்தில் கொண்டும் ஊர் நலன் கருதியும் இனி வரக்கூடிய காலங்களில் சாலை விபத்துகளை தடுப்பதற்கும் அதிரை எக்ஸ்பிரஸ் கள ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக அதிரை நகராட்சி அலுவலகம் அருகே வார சந்தை ECR சாலையில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் இந்த பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு பொதுமக்கள் பலரும் அந்த இடத்தில் உள்ள வார சந்தையை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக்கோரி கோரிக்கை வைத்தும் இன்றளவில் எந்த வித நடவடிக்கையும்  நெடுசாலை துறை மேற்கொள்ளவில்லை.

மேலும் பொதுமக்கள் சாலை ஓரம் நடந்து செல்வதற்கு இடையுராக அதிரை பேருந்து நிலையம் முதல் மல்லிப்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை சாலையில் பல்வேறு வியாபார ஸ்தலங்கள் வைத்திருப்பவர்கள் தன்னுடைய வியாபார தேவைக்காக அந்த ECR சாலையோர நடைமேடைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி சாலை விபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நெடுசாலை துறை எந்த நடவடிக்கையும் இன்றளவும் மேற்கொள்ளவில்லை.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகைகள் நெடுசாலை துறை அதே ECR சாலையில் நடைமேடைகளின் மேற்கூரைகள் இல்லாததையும், சாலையோர நடைமேடைகளில்
வளர்ந்துள்ள புதருகளை அகற்றுவதற்கு பல மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் நெடுசாலை துறை நடைமேடை மூலம் பொதுமக்களுக்கு பாடைகட்ட முயற்சிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்பொழுது வரை பொதுமக்கள் நலனில் மெத்தனபோக்கில் செயல்படும் நெடுசாலை துறை இந்த கள ஆய்விற்கு என்ன நடவடிக்கை எடுகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...