Saturday, April 19, 2025

அவமதிக்கும் அன்சர்கான் – மா.செவிற்கு பறந்த புகார் மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர திமுகவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோஷ்ட்டி பூசலால் நாளுக்கு ஒரு புகார்கள் மாவட்ட மாநில அளவிற்கு சென்று கொண்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ச. முரசொலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாக்கு சேகரிக்க அதிராம்பட்டினம் வந்தார் அவரை அதிரை நகர திமுக மேற்கு பொறுப்பாளர் அஸ்லம் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது, கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்பாளரின் வாகனத்தில் நின்று வாக்கு சேகர்த்தனர்.

மேற்கு எல்லைகள் கடந்து, கிழக்கிற்கு சென்ற வேட்பாளரின் வாகனத்தில் மமகவின் 24வது வார்டு உறுப்பினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகியுமான அப்துல் மாலிக் இருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற முன்னாள் நகர துணை செயலாளர் அன்சர்கான், மமக மாவட்ட நிர்வாகி மற்றும் மஜக நிர்வாகிகளை ஒருமையில் பேசி வாகனத்தை விட்டு இறங்க கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மமக உறுப்பினர் மாலிக் அன்சர்கானுடன் விவதாத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே அதிரை நகர மமக நிர்வாகிகள் அவசர தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர் அதில் தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இச்செயலை கண்டிக்கும் நோக்கில் பிரச்சார பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும், முறையாக திமுக மாவட்டம்.மற்றும் மாநில நிர்வாகத்திற்கு தங்களின் மமக தலைமையின் மூலமாக புகார் அளிக்க திட்டமிட்டு நடைமுறை படுத்தி உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, திமுக மாவட்ட செயலாளரை சந்தித்த அதிரை நகர மமகவினர் புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.

அதில், கூட்டணி கட்சிகளை மதிக்காமல் அதிரை நகர திமுகவின் கிழக்கு பகுதி, நிர்வாகம். செயலடுவதாலும், திமுக தலைமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதுவரை தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் கலந்து கொள்வதில்லை எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img