உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று பிறை தென்படாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று 30வது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் இன்று மாலை ஷவ்வால் 1ம் பிறை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது. அதனடிப்படையில் நாளை அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு, ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.