புதுதில்லி: உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4,968 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவு; இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கண்மூடித்தனமான, புத்திசாலித்தனமற்ற முடிவாகும் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவிடப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. இதற்காக ரூ.4,968.84 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 365.4 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.1,293.6 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ரூ.7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





