அதிரை எக்ஸ்பிரஸ்:- இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.இதற்கு காரணம் எபோதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான். அதுவே பல குறைபாடுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது உணவு விஷமாக மாறுவதில் துடங்கி இதய நோய், புற்று நோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
1.சமையல் எண்ணெய்:
எந்த ஒரு சமையல் எண்ணெயாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினால் அதுவே புற்று நோய் வர காரணமாய் இருக்கும்.
2.சாப்பாடு:
நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருள் சாதம் ஆகும். அதை சூடுபடுத்தி சாப்பிடும் பொது அதில் உள்ள நிச்சுதன்மை அதிகரித்து அது விஷமாக மாறிவிடும்.
3.சிக்கன்:
சிக்கனை சூடுபடுத்தும் பொது அதில் உள்ள புரதச்சத்து அதிகமாகி விடும். அதை மீண்டும் சூடுபடுத்தும் பொது அது நச்சுதன்மையாக மாறி விடும்.
4.கீரை:
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
5.முட்டை:
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது