அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க ஹானஸ்ட் சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன்படி இன்று மதியம் அதிராம்பட்டினம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுமார் 100 நபர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதனை நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஹானஸ்ட் சங்கத்தின் சாசனத்தலைவர் குப்பாஷா அகமது கபீர் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர் இயக்குனர்கள் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்த நாளே செயல்பாடுக்கு கொண்டு வந்துள்ளோம் என்றும் இனி வரும் காலங்களின் பல நல்ல திட்டங்களை அதிரை நகரில் செயல்ப்படுத்த உள்ளதாக கூறினார்.
அதில் முதல் இலக்காக கருவேல மரங்களை அதிரை நகரை விட்டு அகற்றுவது என்றும் இதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டதாக கூறினார்.
இந்த உணவு வழங்கும் திட்டத்தில் குப்பாஷா அகமது கபீர், கஜ்ஜாலி, முஹம்மது சாலீஹ், அகமது அன்சாரி, கவுன்சிலர் ஷரிஃப், அகமது ரமீஸ், ஃபெரோஸ்கான்,
ரஜபு மொய்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







