63
தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலையிலிருந்தே வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவியரும், வேலைக்குச் செல்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.