அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள் நிலை உள்ளிட்ட உயரிய பதவிகளில் இவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி மையத்திற்கும், அதிரை பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றியாளர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி டிசம்பர் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை ஏ.எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.
அரசுப் பணி கனவு கொண்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்று ஊக்கம் பெறலாம் என மெளலானா அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய நிறுவுனர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.








