அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரையில் கஞ்சா விற்ற கணவன்-மனைவி இருவரையும் கை களவுமாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா தலைமையிலான தமுமுகவினர் பிடித்தனர்.
அதிரையில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து,அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி தவறான பாதைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர் என தகவல்கள் அதிகமாக உலாவந்தன.
இந்நிலையில் அதிரை தமுமுகவினர் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி அருகே இருக்கும் உப்பளம் போகும் வழியில் குப்பத்தில் பெரியசாமி,செல்லமா என்பவரின் வீட்டில் சுமார் 100 கஞ்சா பொட்டலங்களுடன் கை,களவுமாக பிடித்தனர்.இதனையடுத்து உடனே தமுமுகவினர் அதிரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் பரவியதால் இளைஞர்கள் குவியத்தொடங்கினர்.சம்பவ இடத்திற்கு வந்த அதிரை காவல்துறையினர் செல்லமா என்பவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்று அதிரையில் சமூக ஆர்வலர்கள் பலமுறை கஞ்சா விற்பனையாளர்களை பிடித்து கொடுத்துள்ளனர்.ஆனால் அவர்கள் எளிதில் ஜாமீன் பெற்று வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.இதற்கு ஓர் முடிவு வேண்டும் என்பதே இங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.