அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் M.முகம்மது அப்பாஸ் தலைமையேற்று துவக்கவுரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநிலப் பொருளாளர் சுலைமான் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் செயலாளர் ஏ.ராஜா முகம்மது ” வழக்கறிஞர் அணியின் கடந்த காலப் பணிகள் குறித்தும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் ” சிறப்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் S.A.S. அலாவுதீன் ” பார் கவுன்சில் தேர்தலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவமும் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
SDPI கட்சி மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ” வழக்கறிஞர் அணியின் வளர்ச்சியும் நீதித்துறையின் இன்றைய போக்கும் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் லா அகாடமியின் நிறுவனத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஏ.ஜஹாங்கீர் பாதுஷா அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக வழக்கறிஞர் அணியின் மதுரை மாவட்டத்தலைவர் ஏ.சையது அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்தினார்.
வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் முன்னணி வகித்தனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன
1. எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே வழக்கறிஞர்களை விலை பேசுவதும், குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட வழக்கறிஞர் சங்கங்களை ஏலத்திற்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். வாக்குகளை விலைக்கு வாங்கும் இது போன்ற செயல்களை தேர்தல் நடத்தும் கமிட்டி கண்காணித்து அத்தகைய வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பார் கவுன்சில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
2. வழக்கறிஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை மிகச்சிறப்பாக வருகின்ற பிப்ரவரி மாதம் 10ம் தேதி, திருச்சியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
3. பார்கவுன்சிலில் வழக்கறிஞர் பதிவிற்காக விண்ணப்பிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சிறு சிறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி என்ரோல் செய்ய மறுப்பது இயற்கை நீதிக்கும், வாழ்வாதார உரிமைக்கும் எதிரானது ஆகும். ஆகவே பார்கவுன்சில் மேற்படி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..