Friday, March 20, 2026

மோடிக்கு எதிராகக் காவடி தூக்கி `பக்கோடா’ கோஷம் எழுப்பிய விவசாயிகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கபடவில்லை. விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ‘பக்கோடா பக்கோடா’ என மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img