Tuesday, February 3, 2026

சுற்றுசூழல் மன்றம் 90.4கின் ஆலோசனை கூட்டம் மற்றும் அதன் முடிவுகள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினத்தில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.03.2018) மதியம் 1.00 மணிக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுசூழல் மன்ற தலைவர்.வ.விவேகானந்தம் மற்றும் செயலர்.எம்.எப்.முஹம்மது சலீம் தலைமை தாங்கினர்

தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி தூய்மைத்தூதுவர்கள் ஜாஹீர்,அஃப்ரீத்கான்ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அதிரை பேரூராட்சி பகுதியில் குப்பைகள் அதிகம் இருக்கும் இடங்களும் , பேரூராட்சியின் குப்பைக்கிடங்கும் பார்வையிட்டனர்.

குப்பைக்கிடங்கில் குப்பைகள் வாசல் வரை நிரம்பி வந்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி நடைபெறவில்லை.

பேரூராட்சியில் ஒரு வாரமாக குப்பைகள் அல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குறை கூறினார்கள்.பல இடங்களில் துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து புகார் மனு கொடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஜமாத்தார்கள் , பஞ்சாயத்தார்கள் , இளைஞர் அமைப்புகள் தனித்தனியாக புகார் மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் அதிரை வாசிகள் , தூதரகங்கள் மூலமாக மாண்புமிகு இந்திய பிரதமர் , மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் அதிரை பிரச்சனை குறித்து புகார்மனுக்கள் அனுப்ப ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img