Sunday, March 22, 2026

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் காவல் துறை! கருத்து பதிந்த நூருல் கைது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முரசு சப் எடிட்டர் அதிரையை சார்ந்த அதிரை பிறை நூருல் விசாரணைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எச்.ராஜா குறித்து தன்னுடைய இணையத்தில் செய்தி வெளியிட்டமைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் காலையில் இருந்து தற்போது வரை வைத்திருக்கின்றனர்.இதனை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்திய தேசத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை மத்திய,மாநில அரசுகள் முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது போல் தேசம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும்,கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது, இதனை உடனே அரசு நிறுத்திட வேண்டும். அரசியலமைப்பு வழங்கிய உரிமையின்படி தான் பத்திரிக்கை துறை இயங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாலை முரசு சப் எடிட்டர் நூருல் உடனே எந்தவித விசாரணையின்றி முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து விடுதலை செய்திட வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை வைக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img