Sunday, March 22, 2026

அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன.

இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும் நிலையை மாற்ற எண்ணிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நடுநிலை பள்ளியாக (8ஆம் வகுப்புவரை) மாற்ற கடும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் மாணவ, மாணவியர்களை உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி!

கரன்சி கறக்கும் தனியார் பள்ளிகளை விட தரமான கல்வி, சுகாதாரம், சத்துணவு, முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்களை கொண்ட வகுப்பறைகள் இயற்கையான சூழலில் அமைந்த நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமது பிள்ளைகளை சேர்த்து தரமான கல்வியை இலவசமாக பெற்றிடுவோம்.

விரைவில் இப்பள்ளியில் பயின்று அயல் நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் அலுமினி அசோசியேசன் துவங்கப்பட உள்ளது.

இதன்வாயிலாக ஏழை மாணாக்கர்களுக்கு பல்வேறு பட்ட நல உதவிகள் கிடைக்க வாய்ப்புகளும் உள்ளன.

எனவே பெற்றோர்கள் இப்பள்ளியில் தயக்கமின்றி பிள்ளைகளை சேர்த்து அவர்களின் எதிர்கால நலனில் பங்கெடுத்து கொள்ளுங்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img