Saturday, March 21, 2026

அதிரையில் பதற்றத்தை உருவாக்க இந்து முன்னணி முயற்சி …..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி.

விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக இதுவரை இல்லாத வகையில் புதியதாக காவல்துறையின் அனுமதியின்றி 30க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தை சர்ச்சையான கோஷங்களுடன் இந்து முன்னணி அமைப்பினர் சிலையை எடுத்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

தகவலையறிந்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து கடுமையான எதிர்ப்புகளை எஸ்.ஐ இராஜேஷிடம் சொல்கையில் அவர் உரிய முறையில் பதிலளிக்காமல் பொதிமக்களையே மிரட்டும் வகையில் பேசினார்.இதனால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து அதிரை காவல்நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் ஹாஜா தலைமையில் டிஎஸ்பி செங்கமலக்கண்ணனிடம் புகார் மனு அளித்தனர், அடுத்த முறை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது என்றும், இப்போது அளித்துள்ள புகார் மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் அன்வர்,நளீம்,வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img