Thursday, February 5, 2026

காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் ₹5 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டியதிருந்தது.

இதனால் மைதீன் கனி ₹5 லட்சத்தை காசோலையாக நாடியம்மாளிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் மைதீன் கனி கொடுத்த அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது முறையாக பணம் இல்லாததால் வங்கியில் இருந்து காசோலை நாடியம்மாளிடமே திரும்ப வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நாடியம்மாள் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதி மன்றத்தில் மைதீன் கனி மீது வழக்கு தொடர்ந்தார்.

இவ் வழக்கை அதிரை SDPI யின் வழக்கறிஞர் சஃபியா நிஜாம் மேற்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மைதீன் கனிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், இழப்பீட்டு தொகை ₹ 5 லட்சமும் அவர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து இவ் வழக்கு ஒன்றரை ஆண்டுகள் விசாரணயில் போராடிய வழக்கறிஞர் சஃபியா நிஜாமிற்கு வெற்றி கிடைத்துள்ளது.இவர் SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img