Friday, February 6, 2026

பூனைக்கறியை புசிக்கிறாரளா அதிரையர்கள்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: பள்ளி கல்லூரி விடுமுறை காலம் என்பதால் களை கட்டுகிறது அதிரை !

ஒருபுறம் தேர்தல் மறுபுறம் நோன்பு இவைகளால் அதிரை நகரின் இளைஞர்கள் உற்சாகம் கொண்டுள்ளனர்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் படிப்பிற்காக சென்ற பலர் விடுமுறை என்பதால் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அன்றாடம் சாலையோர உணவு விடுதிகளில் சிற்றுண்டி உள்ளடக்கிய பதார்த்தங்கள் உண்டுமகிழ்ந்து வருகின்றனர்.

இதனை சாதாமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோத வியாபாரிகள் கோழிக்கறி என கூறி வேறு பிராணியின் மாமிசத்தை(?)வைத்து பக்கோடா செய்து விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் இவ்வூரில் இது போன்ற விடயங்கள் எம்மை அதிச்சிக்குள் ஆழ்த்துகிறது.

பத்து ரூபாய்க்கு கோழி பக்கோடா என்றதும் வாயை பிழந்துக்கொண்டு வாங்கி உண்ணும் பலர் அது என்ன மாமிசம், ஹலால் செய்யப்பட்டவையா என்பதெல்லாம் ஆய்வு செய்யாமல் உட்கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரதான ஏரியாவில் ஒரு தள்ளுவண்டி கடையில் கனஜோராக நடைபெறும் பக்கோடா விற்பனையில் தான் ரோமம் நீக்காத சந்தேக கறி பக்கோடா விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இந்த மாமிசத்தின் துண்டை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட கடையை சட்ட ரீதியாக அகற்றுவதுடன் உரிய தண்டனையை பெற்றுத்தர அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் முயற்ச்சிகளை மேற்கொள்ளும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img