Monday, March 23, 2026

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.மதராஷா செல்லும் குழந்தைகளையும்,பெண்களையும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.மல்லிப்பட்டிணம் கடைவீதிகள் மற்றும் தெருப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.

மேலும் கடந்த சிலநாட்களாக சுற்றி திரியும் நாய்கள் ஆடுகளை கடித்து குதறி வருகின்றது.இதனால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நம்மிடம் A.நூருல் அமீன் தெரிவிக்கையில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்திட சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img