சென்னை மற்றும் கோவையில் இயங்கி வருகிறது தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி. இதன் தென் மண்டல மாணவர் சேர்க்கை அலுவலகம் பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் அருகில் உள்ளது.
மேற்படி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் இன்று பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சால்வையணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
பல்வேறு ஆசிரியர்கள், ஆசிரியர் பணி குறித்தும் மாணவர்கள் மற்றும் கல்வி குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.மேலும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியினை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரியில் தென்மண்டல மாணவர் சேர்க்கை அலுவலர் முஹம்மது யஹ்யா ஏற்பாடு செய்தார்.












