மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்பட்ட ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள ஜாகீர் நாயக் மலேசியாவில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, “ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முடியும் நிலையில் உள்ளது. இது முடிந்ததும் விரைவில் மலேசிய நாட்டு அரசுக்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை முன்வைப்போம். கோரிக்கை என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாக தெரியும்,” என தெரிவித்துள்ளார்.
More like this

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





