Sunday, February 8, 2026

குடிமகன்களின் மனம் குளிர அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தன. 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட உடன் மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதினர்.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img