Sunday, February 1, 2026

மழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்துவருவதால் முக்கியச் சாலைகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை, வடச் சென்னை டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, எம்.எம்.கார்டன் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img