Sunday, May 5, 2024

புரெவி புயல் – கொடைக்கானல் வாகனம் செல்ல தடை!

Share post:

Date:

- Advertisement -

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலை சாலைகளில் இன்று மாலை 7 மணியில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இலங்கை இலங்கையின் திருகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கத் தொடங்கியது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்தது.

மேலும் புரெவி புயல் பாம்பனுக்கும கிழக்குப்பகுதியில் 80 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் தற்போது பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. எனவே கொடைக்கானலின் நேற்று முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், போக்குவரத்து மலை சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரெவி புயல் பாம்பன் அருகே கரையை கடக்கும் போது காற்றின் தாக்கும் அதிகமாக காணப்படும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...