அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் நேற்று(03/07/2023) நடைபெற்ற பதினேழாம் நாள் ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணியினரும் செயின்ட் ஜோசப் திருச்சி அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய செயின்ட் ஜோசப் திருச்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றையதினம்(04/07/2023) விளையாட வேண்டிய அணிகள் :
NFC திருச்சி vs பாலு மெமோரியல் திருச்சி
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்