Tuesday, March 24, 2026

இலங்கையில் பாதியாக குறையும் மின் கட்டணம் !

spot_imgspot_imgspot_imgspot_img

பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்த இலங்கை அரசு தற்போது மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருகிறது. முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து உத்தரவிட்டது இதனால் அரிசி ரவை கோதுமை எண்ணை உள்ளிட்டவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன.

அதன் வரிசையில் தற்போது மின்சார கட்டணத்தை 14.2 வீதம் குறைஒத்திருக்கிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 யூனிட்கள் வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு யூனிட்டிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்பட்ட  கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 யூனிட்டுகளுக்கு குறைவான யூனிட்டுகளுக்கு கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும்,  650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 யூனிட்களுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு யூனிட் கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மக்கள்.மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை செய்தியாளர் – அபூசயீத் . சிலாவத்துறை.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img