Sunday, February 1, 2026

அதிரையில் போடப்படும் பேப்பர் ரோஸ்ட் சாலை ~ டோட்டல் வேஸ்ட் என மக்கள் புலம்பல் ! (VIDEO)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்த்து பெற்றதிலிருந்து நகர மேம்பாட்டில் அதிரை நகராட்சி அக்கரை செலுத்தி வருகிறது !

அதற்க்காக கடந்த இர்ண்டாண்டிற்கு முன்பு போடப்பட்ட சாலைகளை மேம்பாடு என்ற அடிப்படையில் பேப்பர் ரோஸ்ட் சாலைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி 13வது வார்டுக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி ரோடு சாலை கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் போடப்பட்ட தார் சாலையில் எந்த வித பழுதும் ஏற்படவில்லை, இருப்பினும் இச்சாலையை மேம்பாடு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது அதனையடுத்து இதனை நகராட்சி நிர்வாகம் வேறு வழியின்றி அப்பணியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இப்பகுதி மக்களின் கருத்தாக கூறப்படுவதாவது, நகரின் பல பகுதிகளில் சாலையே இல்லாமல் உள்ளது என்றும் அதனை புதுப்பிக்க வேண்டியதை விடுத்து நல்ல சாலைகளை செப்பனிடுவதாக கூறி சல்லடை சாலைகளை அமைத்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர், மேலும் மில்லிங் செய்யப்படாமல் போடப்படும் சாலைகளின் லட்சனத்தை அறிய ஒரே ஒரு மழை போதும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்

கள ஆய்வில் அவ்வாறாகவே காண கிடைக்கிறது ஆக மொத்தத்தில் பேப்பர் ரோஸ்ட் சாலை டோட்டல் வேஸ்ட்… மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் வேதனைத்தான் மிஞ்சும் !

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img