போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது என்று வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளது, பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...





