நமது ஊரில் வசிக்கும் அதிகமான மாணவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த தெரியாமல் இருக்கிறார்கள்.
சில மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால், அவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த முன்வருவதில்லை.
உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களுக்கு இயல்பாகவே திறமைகள் இருக்கின்றது.
குறிப்பாக மாணவர்களுக்கு திறமைகள் அதிகமாகவே இருக்கின்றது.
ஆனால் அதை யாரும் பயன்படுத்தவும் இல்லை, வெளிப்படுத்தவும் இல்லை.
இது போன்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் தாயாக மதிக்கக்கூறிய ஆசிரியர்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவியாகவும் துணையாகவும் இருக்கவேண்டும்.
முற்காலத்தில் பெரியோர்கள் கூறுவார்கள் “ஆக்கமும் ஊக்கமும் இருந்தால் சாதனை கைகொள்ளலாம் ” என்று.
இந்த தொழில்நுட்ப கால சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் செல் போன்களில் GAME விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் .
இந்த நிலையை உருவாக்கியது யார்?
சற்று சிந்தித்து பாருங்கள்…
முந்தைய காலத்தில் மாணவர்கள் கைப்பந்து, கால்பந்து, மட்டைபந்து(cricket) போன்ற விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தது மட்டுமின்றி திறமை வளர்த்து வந்தார்கள்.
ஆனால் ,தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு சில மாணவர்கள் மட்டும் தான் மேல் கூறப்பட்டுள்ள விளையாட்டுகளை விளையாடி திறமைகளை வளர்த்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு அதிரையை சேர்ந்த மாணவன் தமிழ்நாடு கால்பந்து அணிக்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார். இது போன்ற மாணவர்களும் அதிரையில் இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு திறமைகள் எந்த துறையில் இருக்கின்றது …
கல்வியில் இருக்கிறதா?
அல்லது
விளையாட்டில் இருக்கிறதா?
அல்லது
மற்ற துறையில் இருக்கிறதா என்று ஆராய்தல் வேண்டும்..
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு எவ்வாறு நல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுகிறார்கள் .
ஆனால், ஆசிரியர்கள் வாழ்வில் எவ்வாறு சாதிப்பது என்பதை கற்றுக்கொடுகிறார்கள்.
ஒரு பிள்ளையை மாணவனாக மட்டுமல்லாமல் சாதனையாளராக உருவாக்குவதும் ஆசிரியர்களே..
ஆசிரியர்கள் மெழுகு வர்தியை போல்… மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமென்று தன்னை அர்ப்பணித்த கொள்வார்கள்..
மாணவர்களே நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த தயங்காமல் களம் இறங்குங்கள்.
கிடைக்கும் வாய்ப்பினை கண்டிப்பாக பயன்படுத்துங்கள் .
தோல்வியோ? வெற்றியோ?
கலந்துகொண்டுதான் பார்ப்போமே என்று இறங்கி வாய்ப்பை பயன்படுத்தி பாருங்கள்.
தங்களுக்கு தோல்வி ஏற்பட்டால் அதனை நினைத்து வருந்தாமல் தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என நினைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்..
கண்டிப்பாக நான் கூறுகிறேன் நீங்கள் தான் அந்த அடுத்த திறமைசாலி..
ஆக்கம் : அதிரை பாய்ஸ் அஹமது பின் ஹிதாயதுல்லாஹ்.