Wednesday, March 18, 2026

அதிரை டூ சென்னை அரசின் நேரடி AC பேருந்து சேவை..! இன்று துவங்கி வைக்கிறார் MLA..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நிறுத்திய பேருந்து சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் பேரூர்மன்ற தலைவர் S.H.அஸ்லம் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவையை அரசு மீண்டும் துவக்க கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ்ன் முதன்மை ஆசிரியர் ஹசன் சமீபத்தில் சென்னையில் உள்ள பல்லவன் விடுதியில் அதிரை சென்னை வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்ற
இன்று முதல் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி புதிய குளிரூட்டப்பட்ட அரசு பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது. இந்த சேவையை இன்றிரவு 7.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைக்க இருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img