Wednesday, March 18, 2026

எச்.ராஜாவை கைது செய் – அதிரை போலிசில் புகாரளித்த அதிரை காங்கிரசார் !

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக சில காலங்களாக  வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்க  கூடியவர்கள் இத்தகைய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சொயினர் கருதுகின்றனர்.

இதனூடாக ராகுல் காந்தி குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்து  வரும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுவில் தலைவர் எச்.ராஜா, உத்தரப்பிரதேச மாநில அமைச்சா் ரகுராஜ் பிரதாப் சிங், மத்திய ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, மகாராஷ்டிர மாநில சிவசேனை(ஏக்னாத் சிண்டே) எம்எல்ஏ சஞ்சய் கெய்ட்வாட், தில்லி முன்னாள் எம்எல்ஏ தா்விந்தா் சிங் மா்வா ஆகிய 5 போ் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் புகார் அளித்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் உயரதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மனு அளிக்க
மாவட்டத் துணை தலைவர் ரவிகுமார், நகர சிறுபான்மை துணை தலைவர் மாலிக், நகர செயலாளர் அலி அக்பர் கான், இப்ராஹிம், நகர இணை செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img