Sunday, February 1, 2026

அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் வீடியோ இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் விடியோ இணைப்பு)

மஞ்சவயல் கலவரத்தில் பலியான இருவரின் உடல்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் தமுமுகவின் உதவியை நாடியுள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அதிரை மற்றும் பட்டுக்கோட்டை கிளைகளுக்கு சொந்தமான இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களையும் எடுத்துக்கொண்டு மஞ்சவயலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது காவலரின் சொல்படியே ஓட்டுநர் பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்சை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து ஓட்டுநர் மீது கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து தமுமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி, மதம் பார்க்காமல் மனிதாபிமான சேவையை செய்து வரும் மனிதரை காவலர்கள் இருக்கும்போதே  தாக்குவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

போகிற போக்கில் மால் விசிட்! அதிரை யூசுப்!! (Vlog)

அதிரையை சேர்ந்த யூசுப், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் பல பகுதிகளை வீடியோகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு...

அதிரை சிறார்கள் குர்ஆன் போட்டி -பரிசளிப்பு விழா (நேரலை)

அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா...

வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துரைக்கும் பழைய சட்டை ! வீடியோ இணைப்பு.

இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு...
spot_imgspot_imgspot_imgspot_img