Saturday, September 13, 2025

துபாயில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று (25/01/2019) வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு துபாய் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 25வது மாபெரும் இரத்த தான முகாம் தமுமுக சார்பில் நடத்தப்பட்டது.

அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், தமுமுக அமீரக துணை தலைவர் AS.இப்ராஹிம், தமுமுக அமீரக பொருளாளர் Dr.அப்துல் காதர், தமுமுக அமீரக துணை செயலாளர் கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் 25வது இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்
Consulate General of India – சஞ்சீவ் குமார் தூதரக அதிகாரி (consul), அமீரக திமுக தலைவர் S.S.மீரான்,
Emirates Red Crescent Community Awareness Co ordinator ஃபைஸ் முகம்மது, முஸ்லிம் லீக் அமீரக பொதுச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், தொழிலதிபர் இளையான்குடி அபுதாஹீர், டாக்டர் முகையதீன், தொழிலதிபர் ஹசீனா, தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்,,காங்கிரஸ் பொருப்பாளர் ஜுனைத், முஸ்லிம் லீக் துபாய் மண்டல பொருப்பாளர் பரக்கத் அலி, அமானுல்லாஹ், சகோ. நியாஸ் ஆகியோர் இரத்ததான முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதில் தமுமுக துபாய் மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது, தமுமுக துபாய் மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக துபாய் மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக துபாய் மண்டல துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மக்கள் செய்தி தொடர்பாளர் திருச்சி பிலால்,மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக்,துபாய் மண்டல தமுமுக ஊடக பிரிவு செயலாளர் முத்துப்பேட்டை பைசல் மற்றும் மண்டல,கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கலந்துகொண்டனர்.

இம்முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்கள் இரத்ததானம் செய்தனர்.

அயல்நாட்டிலும் தமுமுக’வின் சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது என்று இந்திய தூதரக அதிகாரி தமுமுக அமைப்பினை பாராட்டினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img