Thursday, March 19, 2026

தஞ்சை அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் உரசி 5 பேர் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மன்னார்குடி – தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.. கல்லணையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இன்று மதியம் வரகூர் வந்த போது லாரியை முந்த முயன்றதால், இடது புறமாகச் சென்றதில் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது பேருந்தின் மேற்கூரை உரசியது.

இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த நடராஜன், மாரியப்பன், கல்யாணராமன், கவிதா, முனியம்மாள் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img