Wednesday, March 18, 2026

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

பலத்த பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறுதியாக மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடை அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவானது நிறைவுபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைக்கும் பணி தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இன்று தேர்தல் நடைபெறும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுவையிலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img