Sunday, February 1, 2026

அதிரையில் ஊழலற்ற உள்ளாட்சியே எங்களின் லட்சியம் – MMS கரீம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

45ஆண்டு கால ஆளுமை, நகர நிர்வாகத்தில் முன் அனுபவம்,அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு என அத்தனையும் ஒருங்கே பெற்ற குடும்பத்தினர் இம்முறை உதயசூரியன் சின்னதில் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து மமீசெ குடும்ப நபர் ஒருவர் தெரிவிக்கையில், அதிரை நகர கட்டமைப்புக்கு எங்களின் முன்னோர்களான மறைந்த சுல்தான் அப்துல் காதர், அப்துல் வகாப் சாச்சா வரையில் அவர்கள் எடுத்த சிரத்தையுடன் கூடிய உழைப்பை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

சாச்சாவின் மறைவிற்கு பின்னர்,தாம் பயணித்த கட்சி பாசிச சித்தாந்த கொள்கையை தூக்கி பிடித்த நேரத்தில் பதவிகளை உதரி தள்ளிவிட்டு சமுதாய நலன் ஒன்றே மேலானது என்று அக்கட்சியை விட்டு அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருந்த நேரத்தில் சிலரின் வற்புறுத்தல் காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் எங்களின் குடும்ப நிர்வாகிகள் இணைத்து கொண்டனர்.

இந்த நிலையில் எங்களின் MMSA தாஹிரா அம்மாள் நகர் நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த பெண்மனி என்பதாலும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இம்முறை திராவிட முன்னேற்ற கழகத்தில் 10வது வார்டில் போட்டியிடுகிறோம் என்றும்,

எங்களின் கடந்த கால சேவைகள், இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால் எங்களின் முன்னோர்களின் ஊழலற்ற பணிகளே என்று சான்றளிக்கபடுவதாக தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img