தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளர் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை மற்றும் அதிரை ததஜ கிளைகள் சார்பில் நடந்த இந்த மாபெரும் இரத்த தானத்தை பொறுத்தவரை சமீபத்திய அரசு அவசர உயிர்காக்கும் மருத்துவ துறையின் அறிக்கையில் பல மருத்துவமனைகளில் போதிய அகவு இரத்த இருப்பு இல்லை என்றும் இதனால் உயிரிழப்பு உள்ளிட்ட இடர்பாடுகள் அரங்கேறி வருவதாக அது காட்டுகிறது.
இதனை அடுத்து அதிராம்பட்டினம் ததஜ கிளை 1,2 ஆகியவை இணைந்து இந்த இரத்த தான முகாமினை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று ஆவனத்தில் விரைவில் மாபெரும் இரத்த தான முகாம் நடத்த இருப்பதாக தெரிவித்த அவர் ததஜவை பொறுத்தவரை முகாம்களில் மட்டுமல்ல அவசர தேவைகளுக்கு கூட இரத்த கொடையளித்து வருகிறார்கள்.
இதற்காகவே பிரத்தியேக செயலி ஒன்றையும் மாநில தலைமை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது..அதன்மூலம் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது எனவும், கொடையாளர்கள் மட்டுமின்றி இரத்தம் தேவை உள்ளவர்களும் இச்செயலி மூலமாக இலகுவாக இரத்தம் பெற இயலும் என்றார்.
முன்னதாக மருத்துவர்கக் கொடையாளர்களை ததஜவின் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இரத்தம் கொடையளித்த அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பழரசம் வழங்கினர்
.






