நேற்றைய தினம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வை துவக்கியது குறித்து கேள்வி எழுப்பிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவ்ர்ளோடு ஆணவ உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் சார்பாக வன்மையாக கண்ப்பதாக இளைஞரணி மாநில செயலாளர் சிராஜுதீன் வலியுறுத்தி உள்ளார்.
அரசு விழாவில் அந்த தொகுதியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வருகை தருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு நிகழ்வை துவக்கிவிட்டு வேண்டுமென்றே ஆதரவாளர்களோடு மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடும் அமைச்சர் இராஜ கண்ணப்பன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..
இல்லையேல் திமுகவின் அணுகுமுறைக்கு வரலாற்றில் இது மிகப்பெரிய களங்கம் ஆகிவிடும் என இந்துய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி மாநில செயலாளர் சிராஜுதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.