Monday, May 6, 2024

எர்ணாகுளம் நிரந்தர ரயில் – அதிரைக்கு நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டி எண் 06035, 06036 என்ற எண்ணுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த சிறப்பு ரயில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய நிறுத்தங்களில் நின்று சென்ற நிலையில், இந்த ரயிலை வாரம் இருமுறை விரைவு ரயிலாக மாற்றி அறிவித்த தெற்கு ரயில்வே, அதிராம்பட்டினம், பேராவூரணி போன்ற நிறுத்தங்களை நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், 28/08/2023 முதல் 18/09/2023 வரை எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் 16361, 16362 என்ற எண்ணில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் நிரந்தர சேவையாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 06035, 06036 என்ற எண்ணில் வழக்கமான நிறுத்தங்களுடன் சிறப்பு ரயிலாக இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. வரும் 25/09/2023 முதல் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் வாரம் இருமுறை நிரந்தர சேவையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயில்(வண்டி எண் 16361,16362) இயங்கும்.

இந்நிலையில் ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலுக்கு இரு மார்க்கத்திலும் அதிராம்பட்டினம், பேராவூரணி, மானாமதுரை, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, தென்மலை, அவுநீ, குண்டார, சாஸ்தான்கோட்ட, கருநகபள்ளி, மாவேலிக்கரை ஆகிய ஊர்களுக்கு நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கம், பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பழனிமாணிக்கம் எம்பி, மேலும் இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை அதிவிரைவு ரயிலுக்கு நிறுத்தம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...