தெலங்கானாவில் ஆடு திருடியதாக குற்றச்சாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் அவரது நண்பரைக் கட்டி தொங்கவிட்டு நெருப்ப போட்டு சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆடு உரிமையாளர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மஞ்சிரியாலா மாவட்டம் யாப்பல் பகுதியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி ஸ்ரீனிவாஸ். இவரது பட்டியில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டிருக்கிறார். இதையடுத்து, அந்த 2 இளைஞர்களையும் பிடித்து வந்து ஆட்டு பட்டியில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளார். மேலும், தீ மூட்டி புகை போட்டு ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.
Source – NEWS 18 TAMIL
