Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் CBD அமைப்பின் இரத்த தான கொடையாளர் சேர்க்கை முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வரக்கூடிய பல்வேறு அவசரமான இரத்த தேவைகளை அரசுடன் இணைந்து இரத்த தான தன்னார்வ அமைப்புகள் பூர்த்தி செய்து நோயாளிகள் பூரண குணமடைய எந்த வித பிரதிபலன்களையும் பாராமல் உதவி வருகின்றனர்

தற்போதைய சூழ்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் இரத்த தேவைகள் வந்தவண்ணம் இருப்பதை கருத்தில்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு தொடர் இரத்த கொடையாளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் வளாகத்தில் இன்று16.02.2024 காலை 12மணி முதல் தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர்  இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.

இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 100 இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.

இந்த முகாமை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் நகர தலைவர் அப்துல் மாலிக்  தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.

இம்முகாமில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசகர் வ.விவேகானந்தம், அதிராம்பட்டினம் நகர துணைதலைவர் நூர் முஹம்மது மற்றும் மாவட்ட குருதி கோடை ஒருங்கிணைப்பாளர்  பாய்ஸ் அகமது மற்றும் உறுப்பினர் ஏ.முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு இரத்த தானத்தின் அவசியம், யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்பது போன்ற பல விபரங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img