Saturday, September 13, 2025

அதிரையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில்.! தாலுகா, தலைமை தபால் நிலையம், மருத்துவமனையை தரம் உயர்த்துக! S.H.அஸ்லம் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் அதிரை முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான S.H.அஸ்லம் பங்கேற்று தனது பரிந்துரைகளை மனுவாக அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு..

  1. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வழித்தடத்தில் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும்.
  2. ⁠காரைக்குடி-சென்னை எழும்பூர்-காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
  3. அதிராம்பட்டினம் தபால் நிலையத்தை தலைமை தபால் நிலையமாக தரம் உயர்த்தி வேண்டும்.
  4. ⁠வேகமாக வளர்ந்து வரக்கூடிய கடற்கரை நகரமான அதிராம்பட்டினம் நகராட்சி மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது நாம் கொடுத்த வாக்குறுதியான பாதாள சாக்கடை திட்டத்திற்கு மக்களவை தேர்தலுக்கு முன்பாக நிதி ஒதுக்கி அறிவித்து அமல்படுத்த வேண்டும்.
  5. ⁠அதிராம்பட்டினம் கடற்கரைக்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். எனவே அந்த கடற்கரையை மேம்படுத்தி அதனை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும்.
  6. ⁠கிழக்கு கடற்கரை சாலையை கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அருகில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை போதிய வசதிகள் மற்றும் 24மணிநேர மருத்துவ சேவை இல்லாததால் நீண்ட தூரம் படுகாயமடைந்தவர்களை அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி 24மணிநேர மருத்துவமனையாக உருவாக்க வேண்டும்
  7. ⁠சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து தினசரி நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும்.
  8. ⁠அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டில் பெரும்பாலான சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளன. வார்டு முழுவதும் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் பாசன கால்வாயான சி.எம்.பி கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. இந்த வார்டை நகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியில் 2வது வார்டில் சாலை, கழிவுநீர்வடிகாலை மேம்படுத்தி முன்மாதிரி வார்டாக மாற்றித்தருமாறு கோரிக்கைவிடுக்கிறேன்.
  9. ⁠அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றுசேரும் வகையில் அதிராம்பட்டினத்தை தனி தாலுகாவாக உடனே அறிவிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img