Saturday, September 13, 2025

திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு! இரண்டிலும் தனிச்சின்னத்தில் போட்டி!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு ஏற்கனவே தலா 2 தொகுதிகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியில் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தானது. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும், விசிக தலைவர் தொல். திருமாவளவனும் தொகுதிபங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், விசிகவிற்கு கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டு வென்று விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விசிக தனிச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img