Monday, December 1, 2025

குப்பைக்கிடங்காக உருவெடுத்துள்ள MS நகர் 2 ஆவது வார்டு பகுதி.!!  என்ன செய்கிறார் வார்டு கவுன்சிலர்..?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதி குப்பைக்கிடங்காக உருவெடுத்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் முதல் கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் பூச்சிகளும் அந்த குப்பைக்கிடங்கில் ஊடுருவதால் உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதியில் குப்பைகள் சரிவர பெறப்படுவது இல்லையென்றும், ஊராட்சிக்கு என தனியாக 2 குப்பை அள்ளும் வாகனங்கள் இருந்தும் அதற்கென தனி பணியாளர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் எங்கள் பகுதிக்கு குப்பை அள்ளுவதற்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இவை குறித்து 2 ஆவது வார்டு கவுன்சிலர் தமீம் அவர்களுடைய தாயார் ரஹ்மத் நிஷா எந்த வித நடவடிக்கையும் எடுத்ததில்லை என்றும் எங்கள் பகுதி முன்னேற்றத்திற்க்கோ எந்த ஒரு பணியையும் மக்களுக்காக மேற்கொள்வது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த இடத்தில் கிடக்கும் குப்பைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரெத்தியோக வீடியோ விரைவில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் Youtube பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img