Saturday, September 13, 2025

பாஜக கூட்டணியில் அமமுக..!! பாஜக வெற்றிபெற அதிரை அமமுகவினர் அனிலாக செயல்படுவார்களா..?

spot_imgspot_imgspot_imgspot_img

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைய போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் கூறுகையில்..

“பாஜக கட்சியின் தமிழ்நாடு தலைவர் நண்பர் K.அண்ணாமலையும், டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகம் அவர்களிடத்தில் பாஜகவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக வெற்றிபெற அமமுக ஒரு அணிலை போல செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் போன்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார்.”

இந்நிலையில், சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பாஜக உடன் கூட்டணி என்ற நிலைப்பட்டால் அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயலாற்றி வரும் இஸ்லாமியர்கள் பாஜக ஆட்சி அமைக்க அனிலாக செயல்படுவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img