Sunday, February 1, 2026

முத்துப்பேட்டை பேரூராட்சியில் மமகவின் முயற்சியில் CAA சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

CAA சட்டமானது சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டமானது சிறுபான்மை மக்களுக்கும், இலங்கை தமிழர்கள் குடியுரிமைகளை தடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சட்டத்தினை எதிர்த்து வருகின்றனர்.

இந்த சட்டம் அமல்படுத்தியதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் SDPI, MMK, IUML போன்ற கட்சிகளின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமல்படுத்துவதற்கு முன்னரே இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்ற தீர்மானத்தை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைக்க அந்த தீர்மானமும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் CAA சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை 5வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் K.நஜீமா ஹாமீம் பேரூராட்சி மன்ற தலைவரிடம் கடந்த 13/04/2024 அன்று கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் (15/03/2024) முத்துப்பேட்டை பேரூராட்சியில் அவசர கூட்டம் கூட்டப்பட்டு இந்த தீர்மான கோரிக்கையை பரிசீலித்து முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் தமிழக சட்டமன்றத்தில் ஏற்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்து CAA சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற பல்வேறு முயற்சிகளை செய்த பேரூராட்சி 5வது வார்டு உறுப்பினருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பிற பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

பேரூராட்சியின் அவசர கூட்ட அழைப்பிதழ்
தீர்மான நகல்
பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுக்கப்பட்ட புகைப்படம்
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img